இளைஞர் படுகொலை வழக்கில் 24 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது
மதுரை, 28 மே (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள டி.வெள்ளமுத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ராஜ்குமார் (30) என்பவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்தி
Melur Police Station


மதுரை, 28 மே (ஹி.ச.)

மதுரை மாவட்டம்

மேலூர் அருகே உள்ள டி.வெள்ளமுத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ராஜ்குமார் (30) என்பவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், சம்பவம் நடந்த இடத்தில் ராஜ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது.

தகராறு முற்றிய நிலையில் ராஜ்குமாரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய டி.வெள்ளமுத்தம்பட்டியைச் சேர்ந்த அருண் (20), அருள் (22), மற்றும் டி.கோவில்பட்டியைச் சேர்ந்த நவநீதன் (19) ஆகிய மூன்று பேரையும் மேலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தில், மது போதையில் ஏற்பட்ட தகராறின் போது ராஜ்குமாரை கல்லால் அடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN