Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச)
சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா, உடல்நலக்குறைவு ஏற்பட்ட தனது தந்தையை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, இரவு முழுவதும் உடனிருந்து கவனித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழக அரசு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்படுவதாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதனை நடைமுறையிலும் கடைப்பிடிக்கும் வகையில் அமைச்சர் தனது தந்தைக்கு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
அமைச்சர் மதன் ராஜா மருத்துவமனையில் இரவு முழுவதும் தங்கி தந்தையின் உடல்நிலையை கண்காணித்ததுடன், மருத்துவர்களிடமும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரின் இந்த நடவடிக்கை முன்னுதாரணமாக பார்க்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ