Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
அதிமுகவை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜ்மோகன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் கட்சியில் இணைந்தனர்.
இந் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த்,
உங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், “விஜய் முதலமைச்சராக வருவார், சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நம்பி போஸ்டர் ஒட்டி, கொடி பிடித்து உழைத்த தொண்டர்கள்தான் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள்” எனக் கூறினார்.
மற்ற கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி., ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதால் கட்சியினருக்கு அச்சம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“யாரையும் கைவிடமாட்டார் என்பதுதான் முதலமைச்சரின் மனநிலை. புதிதாக இணைந்தவர்கள் தற்போதைய நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். பதவி குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்; தேவையானதை முதலமைச்சருடன் ஆலோசித்து வழங்கப்படும்” என்றும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், “எங்கள் வேட்பாளர்கள் குறைந்த செலவில் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நாங்கள் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஊழல் செய்தால் அடுத்த நொடியில் பதவியில் இருக்க முடியாது; முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்” என்றார்.
“நாங்கள் ஊழல் செய்ய வரவில்லை; மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம்” என்றும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ