தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது – தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சனம்
சென்னை, 28 மே (ஹி.ச.) தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசையும் காவல்துறையையும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இ
Nainar


Na


சென்னை, 28 மே (ஹி.ச.)

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசையும் காவல்துறையையும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

ஆளும் அரசின் நிர்வாகச் சீர்கேட்டாலும், காவல்துறையின் மெத்தனத்தாலும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி அருகே வேன் ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், “கட்சியினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என விமர்சித்துள்ளார்.

மேலும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் 10 வயது சிறுமிக்கு அண்டை வீட்டை சேர்ந்த நபர் பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தையும், சேலம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மின்வாரிய ஊழியர் சீரங்கன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியரே இத்தகைய கீழ்த்தரமான குற்றங்களில் ஈடுபடுவது பேரதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது” என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கொலை வழக்கில் தொடர்புடைய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீதும், கோவை மற்றும் சேலத்தில் சிறுமிகளுக்கு எதிராக குற்றம் செய்தவர்கள்மீதும் காவல்துறை அரசியல் தலையீடின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு விரைவில் உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ