Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 28 மே (ஹி.ச.)
கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டிகள் நடைபெற்றது. 5 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கேடயங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க தமிழ்நாடு, கேரளா, கர்ராடகா மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது.
இந்நிலையில் உதகையில் பிரசித்தி பெற்ற படகு இல்லத்தில் கோடை விழாவின் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளுக்காக படகு போட்டிகள் நடைபெற்றது. இந்த படகு போட்டியினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மிதி படகுகளில் தம்பதியர்களுக்கான போட்டி, பெண்கள் இரட்டையர், ஆண்கள் இரட்டையர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் படகு ஓட்டிகளுக்கான துடுப்பு படகு போட்டிகள் என 5ந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்வில் மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த பாரம்பரிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Hindusthan Samachar / ANANDHAN