Enter your Email Address to subscribe to our newsletters

மணப்பாறை, 28 மே (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரமலை பாளையத்தில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை பயிற்சி நடைபெறுவதால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பயிற்சி தினமும் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை முதல் கட்ட பயிற்சியும், மாலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இரண்டாம் கட்ட பயிற்சியும் நடைபெறும்.
இந்த நேரங்களில் பயிற்சி மையத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்லவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி நடைபெறும் நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிவப்புக் கொடிகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பயிற்சி நேரங்களில் அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.
வீரமலை பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பயிற்சி நேரங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினருக்கான இந்த வழக்கமான பயிற்சி முகாம் 30-ஆம் தேதி இரவுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b