அதிமுக எங்களின் உயிர் மூச்சு,பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை - எஸ்.பி.வேலுமணி விளக்கம்
கோவை, 28 மே (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்த நிலையில், நேற்று (27-06-26) இருதரப்பும் சமாதானத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்
அதிமுக எங்களின் உயிர் மூச்சு:பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை - எஸ்.பி.வேலுமணி விளக்கம்


கோவை, 28 மே (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்த நிலையில், நேற்று (27-06-26) இருதரப்பும் சமாதானத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே சமாதானம் எட்டப்பட்டது.

மேலும், அதிமுகவின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக பழனிசாமி, கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர்.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று (28-05-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

வாக்களித்த மக்களுக்கும், என்னை வெற்றியடைய வைக்க உழைத்த மக்களுக்கும் நன்றி. அதிமுக எங்களின் உயிர் மூச்சு.

நாங்கள் பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை, இதனை ஆளுங்கட்சியும் தெளிவுப்படுத்தியது. எப்போதுமே எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தோல்விக்கு பின்னர் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

அதிமுக பொன்விழா கண்ட கட்சி, 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்தது. ஒரு சில பத்திரிகைகள் தவறாக சித்தரிக்கிறார்கள். எங்களின் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுள்ளது. அண்ணன் - தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.

தவெக இப்போது தான் வந்துள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். எங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு பாடுபட வேண்டும்.

அதிமுக பல தோல்விகளை கண்டுள்ளது. அதைக் கண்டு நாங்கள் துவண்டுவிட மாட்டோம். சி.வி.சண்முகத்தின் கருத்துதான் எங்கள் கருத்து; எங்கள் கருத்து தான் அவரின் கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b