Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 28 மே (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளை மாமுல் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரின் புகாரின் பேரில் தலா இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கணியம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளுக்கு சட்டவிரோதமாக மண் ஓட்டப்படுவதாகவும், அதற்காக தவெக நிர்வாகி விஜயகுமார் மாமுல் கேட்டதாக கூறி செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விஜயகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயகுமார், லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய மூவர் மீது அவதூறாக பேசியது மற்றும் மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கணியம்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம், ரமேஷ், சுனில் ஆகியோர் மீது வழிமறித்து மிரட்டியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருதரப்பினரும் இன்று மாறி மாறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்த நிலையில், இரு தரப்பினரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam