அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைவது துரதிருஷ்டவசமானது - சௌமியா அன்புமணி விமர்சனம்
விழுப்புரம், 28 மே (ஹி.ச.) தர்மபுரி பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தர்மபுரி தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, அதிமுக எம்.எ
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைவது துரதிருஷ்டவசமானது -  சௌமியா அன்புமணி விமர்சனம்


விழுப்புரம், 28 மே (ஹி.ச.)

தர்மபுரி பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தர்மபுரி தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைவது துரதிருஷ்டவசமான நிகழ்வு. மக்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல்.

தேர்தலில் மக்கள் வேட்பாளரின் தனிப்பட்ட பெயரை பார்த்து வாக்களிக்கவில்லை கட்சியின் சின்னத்தை நம்பியே வாக்களித்துள்ளனர்.

எனவே, ஒரு சின்னத்தில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு வந்த உறுப்பினர்கள், தங்களுக்கு வாக்களித்த தொகுதி மக்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் முழுமையான மரியாதை அளிக்க வேண்டியது அவசியம்.

கட்சி மாறுவது என்பது வாக்காளர்களை அவமதிக்கும் செயலாகவே கருதப்படும்

நான் சட்டமன்றத்தில் தொடர்ந்து விவசாயிகளின் குரலாக ஒலிப்பேன்.

தர்மபுரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான நீர் பற்றாக்குறை, விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை, பயிர்க்காப்பீடு போன்ற கோரிக்கைகளை அழுத்தமாக சட்டமன்றத்தில் எடுத்துரைப்பேன்.

மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து களத்திலும், அவையிலும் போராடுவதே எனது கடமை.

இவ்வாறு சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b