Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 மே (ஹி.ச.)
பக்ரீத் திருநாளை கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தியாகம், கருணை. சமத்துவம். மனிதநேயம் ஆகியவற்றை மனித குலத்திற்குப் போதிக்கும் ஈகைப் பெருநாளான பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
இப்பெருநாளில் உலகம் எங்கும் அன்பு, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் தழைத்தோங்கிட அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam