Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (54). குரோம்பேட்டை பணிமனையில் தடம் எண் 31 A பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
இரவு மன உளைச்சலில் இருந்த அருள்ராஜ் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டவர், வீட்டின் மொட்ட மாடிக்கு சென்று தனது சக ஊழியருடன் தொலைபேசியில் பேசியவர், தனக்கு மேல் அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வெகு நேரமாக அருள்ராஜ் வராததால் முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது துப்பட்டாவால் தூக்கில் அருள்ராஜ் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவரகள் உடனடியாக மீட்டு தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN