தமிழ்நாட்டை சேர்ந்த பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்
புதுடெல்லி, 28 மே (ஹி.ச.) தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகனாவை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மூத்த வழக்கறிஞர் மோகனா, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் கடந்த 1988 ஆம் ஆண்டில் பட்டம
மோகனா


புதுடெல்லி, 28 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகனாவை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் மோகனா, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் கடந்த 1988 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்.

நாட்டின் ஐந்தாண்டு சட்டக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் முதல் பேட்ச்சில் பட்டம் பெற்று தேரியவர் மோகனா. தமிழ்நாட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், டெல்லிக்கு சென்று அங்கு வழக்கறிஞராகத் தொடர்ந்தார்.

இந்து மல்ஹோத்ரா மற்றும் சி.எஸ். வைத்தியநாதன் ஆகிய மூத்த வழக்கறிஞர்களோடு இணைந்து பணிபுரிந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு the Advocate on Record தேர்வில் வெற்றி பெற்ற மோகனா, உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் வழக்கறிஞராக தொழில் புரிந்து வருகிறார்.

இவர், மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், கே.கே. வேணுகோபால், ப.சிதம்பரம், அருண் ஜேட்லி உள்ளிட்டோருடனும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பானுமதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நிலையில் மோகனாவும் அந்த கவுரவப் பட்டியலில் இணைந்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P