Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 28 மே (ஹி.ச.)
குற்றால சீசனானது இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கப்பட உள்ள நிலையில், சீசன் நெருங்குவதை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியை புதுப்பிக்கும் பணியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதி கட்டப் பணியாக தற்போது அபாய வளைவு அமைக்கும் பணியானது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, பழைய அபாய வளைவானது அகற்றப்பட்டு சற்று பெரியதாக புதிய அபாய வளைவானது கட்டப்பட்டு வரும் நிலையில், சீசனுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், பணிகளானது தற்போது இரவு, பகல் பாராமல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
மேலும், இன்னும் சில தினங்களில் பணிகளானது முடிவடையும் என சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருட குற்றால சீசனுக்கு கண்டிப்பாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கண்டிப்பாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN