Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
சென்னை திருவேற்காடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு பகுதியில் வசித்து வந்த கலைபவானி என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு புகுந்த நபர் ஒருவர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கொலைக்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற அந்த நபர், அருகிலிருந்த மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார். அவர் முருகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்பகுதியில் துணி அயர்ன் செய்யும் கடை நடத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயமடைந்த முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கலைபவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து திருவேற்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ