Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 மே (ஹி.ச.)
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 13.30 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த உயர்மட்ட மேம்பாலத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதன் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடைபெற்றது.
மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகளின் தற்போதைய நிலை, பணிகள் நிறைவு காலம் மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ