Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மாற்றங்கள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன. கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சில முக்கிய நிர்வாகிகளின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் கட்சியில் மீண்டும் ஒற்றுமை ஏற்பட்ட நிலையில், பல மாவட்டங்களில் இணைந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது வரவேற்பு விளம்பரங்களில் முந்தைய பொறுப்புகளை குறிப்பிடத் தொடங்கினர்.
இந்த சூழலில், தற்போதைய கட்சிப் பொறுப்புகளையே பயன்படுத்த வேண்டும் என்றும், பதவி மாற்றம் செய்யப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளை விளம்பரங்களில் குறிப்பிட வேண்டாம் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை கட்சிக்குள் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P