அதிமுக தொண்டர்களை அழைப்பது ஏன்? – ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.) தவெக சார்பில் அதிமுக தொண்டர்களை கட்சியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்ட
ஆர். பி.உதயகுமார்


தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.)

தவெக சார்பில் அதிமுக தொண்டர்களை கட்சியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது:

உங்களது கட்சி மீதும், தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் நீங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்களா? அல்லது உங்கள் தலைவர் விஜய் மீது நம்பிக்கையை இழந்துவிட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அப்படி இல்லையெனில் எதற்காக நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அதிமுக தொண்டர்களை உங்கள் கட்சியில் சேருமாறு கூவி கூவி அழைக்கிறீர்கள்? எனவும் விமர்சித்தார்.

அதிமுகவின் விசுவாசத் தொண்டர்களை ஒருபோதும் விலை பேச முடியாது என்றும், எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக ஒரு சுயம்புவான இயக்கம் என்றும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகார மமதையில் அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர் என்றும், தற்போது அதே முயற்சியில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டிருப்பதை சகித்துக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் காட்டமாக கூறியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam