ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் தமிழகம் வருகை -ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்று ட்ரோன் பறக்கத் தடை
ராணிப்பேட்டை, 29 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் இன்று சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலுக்கு வர உள்ளதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள்
நரலோகேஷ்


ராணிப்பேட்டை, 29 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் இன்று சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலுக்கு வர உள்ளதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் மட்டும் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடைமுறை வழிகாட்டுதலின்படி, நர லோகேஷ் வருகை தரும் இடங்கள் மற்றும் அவர் பயணம் செய்யும் வழித்தடங்களில் பட்டாசு வெடித்தல், காற்றில் பலூன்கள் பறக்கவிடுதல், ட்ரோன்கள் மூலம் மலர் தூவுதல் மற்றும் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், காவல்துறை, ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகளைத் தவிர, எந்தவொரு தனிநபர், தனியார் நிறுவனம் அல்லது அமைப்பும் உரிய முன் அனுமதியின்றி ட்ரோன் (Drone), சிவில் ரிமோட்லி பைலட்டட் ஏர்கிராஃப்ட் சிஸ்டம் (RPAS), ஆளில்லா விமானங்கள் (UAV) உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவு இன்று ஒருநாள் மட்டும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P