Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 29 மே (ஹி.ச.)
தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மகாநாடு நிகழ்ச்சியில் கட்சிக்கு நிதி பெருமளவில் குவிந்தது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகளவில் நிதி வழங்கினர்.
மொத்தம் ரூ.25.61 கோடி நிதி கிடைத்துள்ளதாக கட்சி தலைவர் மற்றும் முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இதில் முதல் நாளில் ரூ.12.44 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.13.17 கோடியும் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். நிதி வழங்கியவர்களின் பெயர்கள் மேடையில் வாசித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதிகபட்ச நிதி
நெல்லூர் தொகுதி எம்.பி. வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் அவரது மனைவி, எம்.எல்.ஏ. வேமிரெட்டி பிரசாந்தி ரெட்டி ஆகியோர் இணைந்து அதிகபட்சமாக ரூ.5 கோடி நிதி வழங்கினர்.
முக்கிய நிதியுதவிகள்
இரண்டாம் நாளில் எஸ்.ஆர்.சி. இன்ப்ரா சார்பில் ராஜகோபால் ரூ.1.50 கோடி வழங்கினார்.
மத்திய அமைச்சர் பெம்மசானி சந்திரசேகர், மாநில அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி, கட்சி மூத்த தலைவர் கம்பம்பட்டி ராம்மோகன் ராவ் மற்றும் நாராயண கல்வி நிறுவனங்கள் தலா ரூ.1 கோடி வழங்கினர்.
திருப்பதி தொழிலதிபர் கொண்டேபட்டி கங்காபிரசாத் ரூ.50 லட்சம் வழங்கினார்.
மற்ற நிதியுதவிகள்
ஏ.பி. டெக்னாலஜிகல் சர்வீசஸ் தலைவர் மன்னவ மோகன்கிருஷ்ணா ரூ.27 லட்சம், டிடிபி தலைவர் சங்கர் ரெட்டி ரூ.25 லட்சம், சந்திரகிரி எம்.எல்.ஏ. புலிவர்த்தி நானி ரூ.19 லட்சம், ஸ்ரீகாளஹஸ்தி எம்.எல்.ஏ. பொஜ்ஜல சுதீர் ரெட்டி ரூ.15 லட்சம் வழங்கினர்.
மேலும் பல எம்.பிக்கள், hoஎம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ரூ.10 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நிதி வழங்கினர்.
பழமையான மரபு
மகாநாட்டில் நிதி திரட்டும் மரபு நந்தமூரி தாரக ராமராவ் காலத்திலிருந்து இருந்து வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.
முன்பு ‘ஹுண்டி’ முறையில் நிதி சேகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA