தமிழ்நாடு எதிர்காலத்தை காத்திருக்கவில்லை அதை நாமே உருவாக்குகிறோம் - அமைச்சர் கீர்த்தனா
அமராவதி , 29 மே (ஹி.ச.) தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது மாநிலத்தில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை விளக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, தமிழ்நாடு எதிர்காலத்தை காத்திருக்கவில்லை அதை நாமே
A


அமராவதி , 29 மே (ஹி.ச.)

தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது மாநிலத்தில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை விளக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது,

தமிழ்நாடு எதிர்காலத்தை காத்திருக்கவில்லை அதை நாமே உருவாக்குகிறோம்.

மேலும் சிங்கிள் விண்டோ முறை, விரைவான அனுமதிகள், செயற்கை நுண்ணறிவு நகரங்கள், பசுமை ஹைட்ரஜன், விண்வெளி பொருளாதாரம் போன்ற துறைகளில் முதலீட்டாளர்களை வரவேற்போம்.

இவ்வாறு அந்த வீடியோவில் அமைச்சர் கீர்த்தனா பேசி உள்ளார்.

இந்த வீடியோவுக்கு பதிலளித்த ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனித வளத் துறை அமைச்சர் லோகேஷ்,

முதலீடுகளை ஈர்க்க நீங்கள் எடுத்து வரும் முயற்சி பாராட்டத்தக்கது.

ஒவ்வொரு மாநிலமும் தங்களது வாய்ப்புகளை முன்னிறுத்த வேண்டும். முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை உருவாக்குவது அவசியம்.

மேலும் நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலங்களுக்கு இடையே போட்டி அவசியம்.

இதை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவிக்கிறார்.

அதே சமயம், தமிழ்நாட்டுக்கு ஆந்திரப் பிரதேசம் கண்டிப்பாக கடுமையான போட்டி கொடுக்கும்.

மேலும்,சமூக வலைதள விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது விமர்சனங்கள் அல்ல,

முதலீடுகள் தான் என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த கீர்த்தனா,

“நன்றிதமிழ்நாடு மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சமூக வலைதள உரையாடல் மூலம் தமிழ்நாடு–ஆந்திரப் பிரதேசம் இடையே முதலீடுகளை ஈர்க்கும் போட்டி மேலும் வலுப்பெறும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA