வரதட்சணை கொடுமை தட்டிக்கேட்ட மாமனார் - அடித்து கொலை செய்த மருமகன்!
திருவள்ளூர், 29 மே (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே செவ்வாப்பேட்டை தொட்டிக்கலை காலனியில், மகள் தமிழ்ச்செல்விக்கு நடந்துவரும் வரதட்சணை கொடுமையை தட்டிக்கேட்க சென்ற தந்தை ராஜ், மருமகன் ரவீந்தர் மற்றும் அவரது தந்தையால் சரமாரியாக தாக்கப்பட்டு உய
Sevvapet Police Station


திருவள்ளூர், 29 மே (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே செவ்வாப்பேட்டை தொட்டிக்கலை காலனியில், மகள் தமிழ்ச்செல்விக்கு நடந்துவரும் வரதட்சணை கொடுமையை தட்டிக்கேட்க சென்ற தந்தை ராஜ், மருமகன் ரவீந்தர் மற்றும் அவரது தந்தையால் சரமாரியாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து திருமணம் செய்து 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த தமிழ்ச்செல்வியிடம், கணவர் ரவீந்தர், மாமனார் வடிவேல், மாமியார் சாவித்திரி ஆகியோர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரவு மகளை அடித்து துன்புறுத்தியதாகவும், இது குறித்து தமிழ்ச்செல்வி தனது தந்தையிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்த நிலையில், மகளுக்காக நியாயம் கேட்க சென்ற ராஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ரவீந்தரை தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN