புதிய வீட்டுக்கு குடிபெயரும் இபிஎஸ் - இன்று பால் காய்ச்சும் நிகழ்வு நடந்ததாக தகவல்
சென்னை, 29 மே (ஹி.ச.) நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி. தற்போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் “செவ்வந்தி”
இபிஎஸ்


சென்னை, 29 மே (ஹி.ச.)

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி.

தற்போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் “செவ்வந்தி” என அழைக்கப்படும் அரசு பங்களாவில் வசித்து வரும் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள புதிய வீட்டுக்கு விரைவில் குடிபெயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, புதிய வீட்டில் இன்று பால் காய்ச்சும் நிகழ்வு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அவர் புதிய இல்லத்தில் குடியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

ஆனால், இது தொடர்பாக அதிமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Hindusthan Samachar / VINOTH KUMAR P