Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 மே (ஹி.ச.)
இந்திய அரசுக்கு எதிராக வெளிநாட்டு அன்னியசக்திகளின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தில் செயல்படும் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை தடை செய்தும் அதன் ஆதரவாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வழியுறுத்தியும் தமிழக அரசுக்கும்-தமிழக காவல்துறைக்கும், -மத்திய அரசுக்கும் இந்துமக்கள்கட்சி கோரிக்கை புகார் அறிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கோக்ரச் ஜனதா பாட்டி CJP எனும் பெயரில் ஆன்லைன் கட்சி ஒன்று துவங்கப்பட்டு நான்கு நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் இதில் இணைந்து உள்ளதாக இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் வழக்கு விசாரணை ஒன்றில் தெரிவித்த கருத்து வேறு வேலையில்லாத இளைஞர்கள் சமூக ஆர்வலர் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் எனும் பெயரில் நீதித்துறையின் மீது விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.
இத்தகைய இளைஞர்கள் கரப்பான் பூச்சியை போல இந்த சமூகத்தை அழித்து வருகிறார்கள். நீதித் துறையின் மாண்பை குலைத்து வருகிறார்கள். நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்து வருகிறார்கள் என்கிற கருத்தை வெளியிட்டார்.
இது இந்திய இளைஞர் சமூகத்திற்கு எதிரான கருத்து என்கிற ரீதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆன்லைன் மூலமாக துவங்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலமாக பிரபலமாகி வருகிறது.
தமிழகத்தில் அமைதியின்மை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய தேர்தல் களத்தில் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்,
மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமுள் காங்கிரஸ் மேலும் ராகுல் தலைமையிலான சோனியா காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட இன்டி கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் இதை இளைஞர்களின் புரட்சி என்று கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை வரவேற்று கருத்து பரப்பி வருகிறார்கள்.
இந்தியாவைச் சார்ந்த இளைய தலைமுறையினர் அதாவது ஜென் ஜீ இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை மற்றும் ஏழ்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேபாளத்தை போல வங்கதேசத்தை போல இலங்கை போல மாணவர்கள் இயக்கம் மூலமாக இந்தியாவிலும் புரட்சி செய்ய தயாராக உள்ளனர்.
பாரதப்பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியை,வன்முறையை தூண்டக்கூடிய வகையில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி இணையதளங்களில் செயல்படுகிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை அதன் சமூக ஊடகப் பக்கங்களை முடக்கி இந்தியஅரசு தடை செய்துள்ளது. தொடர்ந்து வேறு பெயரில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி இணையதளங்களில் செயல்படுகிறது.
இந்திய இளைஞர்கள் அனைவரும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியில் சேர்ந்து விட்டது போல காங்கிரஸ் ஜோதி மணியும்,திமுக கனிமொழியும் கம்யூனிஸ்டுகளும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
உண்மையில் கரப்பான் பூச்சி ஜனதா மற்றும் கருப்பான் பூச்சி மக்கள் கட்சியின் சமூக ஊடகங்களை பின்பற்றுவோர் வங்காளதேசம் பாகிஸ்தான் அமெரிக்கா உள்ளிட்ட பகுதியில் உள்ளவர்கள் 90% இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் 9% மட்டுமே மட்டும் இந்தியாவை சார்ந்தவர்கள்.
ஆனால் இந்தியாவிற்கு எதிராக இந்திய இளைஞர்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் ஜார்ஜ் சோர்ஸ் உள்ளிட்டோரும்,
இந்திய எதிரி நாடுகளான பாகிஸ்தானம் பங்களாதேஷ் உள்ளிட்ட முஸ்லீம் நாடுகளும் இந்த கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை துவங்கி இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியில் பணியாற்றிய
அபிஜித் என்ற நபர்தான் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை துவக்கி உள்ளார். இதன் சமூக ஊடக பக்கங்களை நிர்வகித்து வருகிறார்.
இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய மக்களை தவறாக வழி நடத்துவதற்காக கரப்பான் பூச்சி மக்கள் கட்சி துவக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் இதுகுறித்து விழிப்புடன் இருக்கிறார்கள்.
திமுகவும் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ் கட்சியும் இதன் சார்பு ஊடகங்களும் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி செயல்படுவதை ஆதரித்தும் பரப்பியும் உதவி செய்தும் வருகிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் டி ஒய் எப் ஐ அமைப்பு போன்ற பிரிவினைவாத நக்சல் அமைப்புகள் மற்றும் தடைசெய்ய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள்,கிருத்துவ மிஷினரிகள் எல்லாம் கரப்பான் பூச்சி கட்சி என்ற பெயரில் ஊடுறவி மதுரையிலும் கோவையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கரப்பான்பூச்சி கட்சிக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
ஆகவே உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்களை அவமதிக்கும் அவதுறு பரப்பும் விளம்பரங்கள்,
இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை எதிர்த்தும்,இந்திய அரசுக்கும் பாரதபிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிராக இந்திய மக்களிடையே வெறுப்பு பிரச்சாரம் செய்யும் வெளிநாட்டு அன்னிய சக்திகளின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தில் செயல்படும் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை தடை செய்தும்,கரப்பான் பூச்சி கட்சி என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிட்டு விசம பி.ச்சாரம் செய்து வரும் ஆன்லைன் மற்றும் இணையதளங்ளை முடக்கம் செய்தும்,அதன் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்தும், இதற்குப் பின்னணியில் உள்ள தேசவிரோதிகள் மீது தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தும் விதமாக தமிழக அரசும் ,தமிழக காவல்துறையும்,மத்திய அரசும் இணைந்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்துமக்கள்கட்சி சார்பில் இந்த அறிக்கையின் மூலமாக கோரிக்கை புகார் சமர்ப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J