Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகார் , 29 மே (ஹி.ச.)
19-வது (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில், லீக் சுற்று முடிவில் 4 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
தர்மசாலாவில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில், பெங்களூரு அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நியூ சண்டிகாரில் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் ஹைதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இதனால் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் நடைபெறுகிறது.
இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வியடைந்த குஜராத் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும். தோல்வியடைந்த அணி தொடரில் இருந்து வெளியேறும்.
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் 2 முறை சந்தித்துள்ளன. அதில் முதலாவது ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இதனால் இரு அணிகளும் சமபலத்துடன் மோதவுள்ளதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA