கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி செயல்பட்ட 7 குவாரிகளுக்கு சீல்
கிருஷ்ணகிரி, 29 மே (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 7 கல் மற்றும் கிரானைட் குவாரிகளுக்கு கனிமவளத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கல் மற்றும் கிரானைட் குவாரிகளில் தீவிர சோதனை நடத்த கனிமவளத்துறை அமை
குவாரி


கிருஷ்ணகிரி, 29 மே (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 7 கல் மற்றும் கிரானைட் குவாரிகளுக்கு கனிமவளத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கல் மற்றும் கிரானைட் குவாரிகளில் தீவிர சோதனை நடத்த கனிமவளத்துறை அமைச்சர் பிரபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

முதற்கட்ட சோதனையில் தேன்கனிக்கோட்டையில் 2, சூளகிரியில் 1, ஓசூரில் 1, கிருஷ்ணகிரியில் 1 என மொத்தம் 5 சாதாரண கல் குவாரிகளும், பர்கூரில் செயல்பட்ட 2 கிரானைட் குவாரிகளும் உரிய அனுமதி இன்றி கனிமங்களை வெட்டி எடுத்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் இளங்கோ நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட 7 குவாரிகளையும் தற்காலிகமாக மூடி சீல் வைத்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam