சென்னை எம்ஜிஆர் நகரில் தவெக பிரமுகர் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை
சென்னை, 29 மே (ஹி.ச) சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சேக் முகமது, இன்று அதிகாலை தனது ஏற்பாட்டில் அப்பகுதியில் தவெக கட்சி போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சூளைப்பள்ளம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் போஸ்டர் ஒட்டப்பட்டுக் கொண்டிர
Hh


சென்னை, 29 மே (ஹி.ச)

சென்னை

எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சேக் முகமது, இன்று அதிகாலை தனது ஏற்பாட்டில் அப்பகுதியில் தவெக கட்சி போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சூளைப்பள்ளம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் போஸ்டர் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ், வசந்த் உள்ளிட்ட சிலர் வந்து போஸ்டர்களை கிழித்ததுடன், அதிலிருந்த சேக் முகமது புகைப்படத்தையும் அவமதிக்கும் வகையில் மாற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சேக் முகமது எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் மனோஜ், வசந்த் உள்ளிட்டோர் சேக் முகமதுவை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த சேக் முகமது, கேகே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பின்னணி மற்றும் அரசியல் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ