Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச)
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும், அரசு சட்டக்கல்லூரிகளில் பொருளாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கும் பணி நியமன ஆணைகளை அமைச்சர் நிர்மல்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் மகளிர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
கோவை சிறுமி கொலை வழக்கில் விரைந்து தீர்ப்பு கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விசாரணை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அமைச்சர்,
அரசியல் செய்வதற்காக பொறுப்புணர்வு இல்லாமல் டி.கே.சிவக்குமார் செயல்பட்டு வருகிறார்.
அவரது அரசியல் நிலைப்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டார் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் உறுதிபட தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ