Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச)
தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. என்.ஆனந்த், கோடம்பாக்கம் 132-வது வார்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கட்டுமான பணிகளில் சுணக்கம் நிலவுவதும், பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.
கள ஆய்வின் போது பணிகளின் தற்போதைய நிலையை கேட்டறிந்த அமைச்சர்,
பொதுமக்களின் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு, அடுத்த 45 நாட்களுக்குள் அனைத்து கட்டடப் பணிகளையும் தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் உதவிச் செயற்பொறியாளர் கமலக்கண்ணன், உதவிப் பொறியாளர் நந்தினி உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் க.அப்புனு என்ற வேல்முருகனும் உடனிருந்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ