Enter your Email Address to subscribe to our newsletters


திருச்செந்தூர், 29 மே (ஹி.ச.)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்-இல் பக்தர்களுக்கான சேவைகள் மற்றும் கோயில் நிர்வாக செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோயிலில் தினமும் நடைபெறும் பக்தர்கள் தரிசன ஏற்பாடுகள், அன்னதான திட்ட செயல்பாடுகள், குடிநீர், கழிப்பறை, தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கோயிலின் சொத்துப் பதிவேடு விவரங்கள், நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் கோயிலுக்கு வர வேண்டிய நிலுவை வருவாய்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும், கோயில் நிர்வாகத்தில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டால், அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அனைத்து விவரங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு, அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ