தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது - பாராட்டி பரிசு வழங்கிய ராமநாதபுரம் எஸ்பி
ராமநாதபுரம், 29 மே (ஹி.ச) ராமநாதபுரம் வல்லபை நகர், முத்தமிழ் நகர், அன்பு நகர், நம்மாழ்வார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூட்டி இருந்த வீடுகளின் பூட்டை உடைத்து ஒரே நாளில் தொடர் கொள்ளை நடைபெற்றது ஒரே நாளில் நான்கு ஐந்து வீட
SP Sandheesh


ராமநாதபுரம், 29 மே (ஹி.ச)

ராமநாதபுரம் வல்லபை நகர், முத்தமிழ் நகர், அன்பு நகர், நம்மாழ்வார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூட்டி இருந்த வீடுகளின் பூட்டை உடைத்து ஒரே நாளில் தொடர் கொள்ளை நடைபெற்றது ஒரே நாளில் நான்கு ஐந்து வீடுகளில் கொள்ளை நடந்ததால் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் மாவட்ட எஸ்பி சந்திஸ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையை தொடர்ந்து தேனியை சேர்ந்த அர்ச்சுனன் மதுரை சேர்ந்த வேட்டைக்காரன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 38 சவரன் தங்கம் ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு ரூபாய் 50 லட்சம் ஆகும். இந்த இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்

தொடர்ச்சியாக வலசை பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி இடமிருந்து தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற முனீஸ்வரன் கார்த்திக் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 1/2 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனர் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்

ராமநாதபுரம் பஜாரில் மூதாட்டி ஒருவரை ஏமாற்றி நாலு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மதுரை சேர்ந்த சித்திரைவேல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்

இதுபோல வழிப்பறி மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு சான்றிதழ்களையும் வரிசையும் மாவட்ட எஸ்பி வழங்கினார்

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்

Hindusthan Samachar / ANANDHAN