Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 29 மே (ஹி.ச.)
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சித்தராமையா அளித்த ராஜினாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராக பதவியேற்றார்.
துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்ற நிலையில், இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி பொறுப்பை பகிர்ந்து கொள்வது குறித்து அப்போது அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், டி.கே.சிவகுமாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வலுத்து வந்தது. இதையடுத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் டெல்லியில் முக்கிய ஆலோசனைகள் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து சித்தராமையா நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சர்களுடன் லோக்பவனுக்கு சென்ற அவர், ஆளுநரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பின்னர், பெங்களூரு திரும்பிய ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்க வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P