Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.)
இடை நிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் பயிற்சி வகுப்பை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் அவர்கள் அறிவித்து மேலும் 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான் மாணவ மாணவிகளுக்கு புதிய பாட புத்தகத்தை வெளியிட்டு அந்த மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெப்ப அலை பெருமளவில் தமிழ்நாட்டை அச்சுறுதித்தியும் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்த நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ மணவிகள் அனைவுக்கும் கோடை விடுமுறையை நீட்டுப்பு செய்து வருகின்ற ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.
இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொண்டோம்.
தற்போது ஜூன் 4ஆம் தேதி அனைத்து வகை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஏற்கனவே 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்பு ஜூன் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளதை மாற்றி இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை தள்ளிவைத்து கோடை விடுமுறைக்கு பிறகு நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன்
அவர்களையும் , மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மதிப்புமிகு சந்திரமோகன் அவர்களையும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களையும் , தொடக்கல்வித்துறை இயக்குநர் மதிப்புமிகு முனைவர் பூ.ஆ.நரேஷ் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J