திருவள்ளூர் அருகே பெண்ணிடம் அத்துமீறல் முயற்சி - வடமாநில இளைஞர் அடித்துக் கொலை
திருவள்ளூர், 29 மே (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள ஆர்.ஆர்.கண்டிகை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த இரண்டு பெண்களிடம் மது போதையில் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படும் வடமாநில இளைஞர் ஒருவர் பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்ப
கொலை


திருவள்ளூர், 29 மே (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள ஆர்.ஆர்.கண்டிகை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த இரண்டு பெண்களிடம் மது போதையில் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படும் வடமாநில இளைஞர் ஒருவர் பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் தகவலின்படி, மேற்குவங்கத்தை சேர்ந்த பிரசன்ஜித் தாஸ் (31) என்பவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், கையில் கத்தி காட்டி மிரட்டி நகைகளை பறிக்க முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், பிரசன்ஜித் தாஸை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.

உயிரிழப்புக்கு காரணமான சூழ்நிலை மற்றும் பெண்கள் அளித்த புகார் உள்ளிட்ட கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam