Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 29 மே (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்விற்காக சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவரிடம், விஐபி தரிசனத்திற்காக அர்ச்சகர்கள் பணம் கேட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலில் நடைபெறும் தரிசன முறைகள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் ரமேஷ் சாதாரண பக்தர் போல டி-ஷர்ட் அணிந்து கோயிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் அமைச்சர் என்பது தெரியாமல் சில அர்ச்சகர்கள் அணுகி, “ரூ.4,000 கொடுத்தால் VIP தரிசனத்திற்கு உடனடியாக அழைத்து செல்கிறோம்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கோயில்களில் விஐபி தரிசன நடைமுறை, பக்தர்களிடம் வசூலிக்கப்படும் தொகை மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வசூல் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், கோயில்களில் பக்தர்களுக்கு சமமான தரிசன வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், முறைகேடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam