சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி – டிடிவி தினகரன் தாக்கு
தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.) தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை கண்டித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது; வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையும்
டிடிவி தினகரன்


தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.)

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை கண்டித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையும் பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகாத தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் விஜய் பதவியேற்றவுடன் அறிவித்த முக்கிய திட்டங்களில் ஒன்றான “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை” திட்டத்தையே இன்னும் தொடங்க முடியாத நிலையில், பெண்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய டிஜிபி நியமனத்திற்குப் பிறகே இந்த திட்டம் அமலுக்கு வரும் என்ற தகவல் உண்மையெனில், “தமிழகத்தில் குதிரைப் பேர அரசு எதற்கு?” எனவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam