Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச.)
விஜய்-யின் மேலாளர் ஜெகதீஷின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பாரம்பரியமான பட்டு வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து கலந்துகொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட பிறகு, அதே பாரம்பரிய உடையிலேயே அவர் தலைமை செயலகத்திற்கும் வருகை தந்தது அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்தது.
முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதல் பெரும்பாலான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் தலைமை செயலக வருகைகளில் கோட்-சூட் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்த விஜய், இன்று முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வந்தது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.
பட்டு வேட்டி சட்டையில் முதலமைச்சர் விஜய் தலைமை செயலக வளாகத்திற்குள் வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
பலரும் அவரது பாரம்பரிய உடைத் தேர்வை வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், அரசியல் மற்றும் நிர்வாக நிகழ்வுகளில் மேற்கத்திய உடை பாணியை பின்பற்றி வந்த விஜய், இன்று தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி சட்டையில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ