Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 29 மே (ஹி.ச.)
ஒட்டன்சத்திரம் தங்கச்சி அம்மாபட்டி அருகே காய்கறி சந்தை எதிரே நெடுஞ்சாலை துறையால் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட வாய்க்காலை தனிநபர் மண்ணைப் போட்டு மூடியதால், தற்போது பெய்த பலத்த மழையின் காரணமாக கடல் போல் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் தண்ணீரில் சிக்கி தண்ணீருக்குள் மாட்டி ஆம்புலன்ஸ் ஆப் ஆகிவிட்டது
ஆம்புலன்ஸ் உடன் வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸை வெளியே தள்ளிச் சென்ற அவல நிலை ஏற்பட்டது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள வாய்க்கால்களை சரி செய்வார்களா? அதேபோல் வாய்க்கால்களை மண்ணைக் கொண்டு மூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J