நெல்லை மென்பொருள் பொறியாளர் கவின் ஆனவ படுகொலை வழக்கில் எஸ் ஐ கிருஷ்ணகுமாரி கைது
நெல்லை, 29 மே (ஹி.ச.) நெல்லை மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் குற்றப்பத்திரிக்கையிலேயே கிருஷ்ணக
கைது


நெல்லை, 29 மே (ஹி.ச.)

நெல்லை மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் குற்றப்பத்திரிக்கையிலேயே கிருஷ்ணகுமாரியின் பெயர் இடம்பெற்றிருந்தபோதிலும், நீண்ட காலமாக அவர் கைது செய்யப்படாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கவின் தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக, வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும், காவல்துறை அதிகாரியான கிருஷ்ணகுமாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, கைது தவிர்த்து வந்ததாக கூறப்பட்ட கிருஷ்ணகுமாரிக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று சிபிசிஐடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்த கைது, கவின் கொலை வழக்கில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.கா

வல்துறை அதிகாரி ஒருவரே வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் இன்னும் சிலரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam