தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்
சென்னை, 03 மே (ஹி.ச.) தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்
Agni Nakshatram begins tomorrow.


சென்னை, 03 மே (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது.

இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்பட கூடிய அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் ‘கத்திரி வெயில்’ காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்குகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறைய தொடங்கும்.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான கத்திரி வெயிலில், பகல் நேர வெப்பநிலை 110 டிகிரி பாரன் ஹீட்டை நெருங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் நிலவும் கத்திரி வெயில் காலகட்டத்தில் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது.

அதிக வெப்பநிலை வெப்பச் சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b