பண்ட்லா கணேஷ் மகள் நிச்சயதார்த்த விழா - எர்ரபெல்லி தயாகர் ராவை தோள் தட்டி அன்புடன் வரவேற்ற சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத், 03 மே (ஹி.ச.) பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான பண்ட்லா கணேஷ் மகள் ஜனனியின் நிச்சயதார்த்த விழாவில் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது. ஜனனி – சூர்யதேஜா நிச்சயதார்த்த விழா ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற
A


ஹைதராபாத், 03 மே (ஹி.ச.)

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான பண்ட்லா கணேஷ் மகள் ஜனனியின் நிச்சயதார்த்த விழாவில் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது.

ஜனனி – சூர்யதேஜா நிச்சயதார்த்த விழா ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் எர்ரபெல்லி தயாகர் ராவ் நேருக்கு நேர் சந்தித்தனர்.

இருவரும் ஒரே நேரத்தில் விழா அரங்கிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடுவை பார்த்ததும் எர்ரபெல்லி தயாகர் ராவ் உடனே அருகே சென்று அவரது கைகளை பிடித்து அன்புடன் வரவேற்றார்.

மேலும் சற்றே குனிந்து வணக்கம் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சந்திரபாபு, எர்ரபெல்லியின் தோளை தட்டி வணக்கம் தெரிவித்தார்.

பின்னர் எர்ரபெல்லியும் பதில் வணக்கம் தெரிவித்தார்.

அரசியல் வேறுபாடுகளை மறந்து இரு தலைவர்களும் அன்புடன் பேசிய காட்சி அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆந்திரப் பிரதேசம் பிரிவதற்கு முன்பு எர்ரபெல்லி தயாகர் ராவ், தெலுங்குதேசம் கட்சியில் சந்திரபாபு தலைமையில் நீண்டகாலம் பணியாற்றியவர்.

மாநில பிரிவுக்குப் பிறகு சிலகாலம் டி.டி.பி.யில் இருந்த அவர், பின்னர் டி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்து தற்போது பி.ஆர்.எஸ். கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

இந்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு , மெகா ஸ்டார் சிரஞ்சீவி இயக்குநர் ராகவேந்திரா ராவ் , நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் , இயக்குநர் ஸ்ரீனு , நடிகர் சிவாஜி , திரைக்கதை ஆசிரியர் கோனா வெங்கட் , தயாரிப்பாளர் C. கல்யான் மற்றும் முன்னாள் எம்.பி. ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA