Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 03 மே (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆகிவீட்டில் சர்ச்சைக்கு உள்ளாகி வந்த ராமர் கோவில் மறுகட்டுமான பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஆந்திர சட்டசபை துணை சபாநாயகரும், உண்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுராமகிருஷ்ணராஜு தனது மனைவியுடன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்தார்.
காலை 7.14 மணிக்கு நிர்ணயிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் ரகுராமகிருஷ்ணராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமர் கோவில் கட்டுமான பணிகளை தடுக்க சிலர் நீதிமன்றத்தை நாடியிருந்தாலும், எந்தவிதத்திலும் பின்வாங்கப்போவதில்லை.
எத்தனை தடைகள் வந்தாலும் கோவில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
கிருஷ்ண சிலைகளைக் கொண்டு சுமார் 800 ஆண்டுகள் நிலைத்திருக்கும் வகையில் கோவில் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற உதவிய பக்தர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சமூக வலைதளம் மூலம் அவர் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக ஸ்ரீராமநவமி விழாவையொட்டி கோவில் கட்டுமான விவகாரத்தில் இரு தரப்பினருக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் ஐகோர்ட்டு வரை சென்ற நிலையில், அரசின் அனுமதியுடன் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் காரணமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA