பேஜவாடா கனக துர்கை அம்மன் கோவில் உண்டியல் வருமானம்ரூ.2.83 கோடி கிடைக்கப்பெற்றது
விஜயவாடா, 03 மே (ஹ.ச.) விஜயவாடா இந்திரகீலாத்ரியில் அமைந்துள்ள கனகதுர்கை அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மூலம் கடந்த 17 நாட்களில் ரூ.2.83 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரை கிடைத்த உண்டியல்
A


விஜயவாடா, 03 மே (ஹ.ச.)

விஜயவாடா இந்திரகீலாத்ரியில் அமைந்துள்ள கனகதுர்கை அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மூலம் கடந்த 17 நாட்களில் ரூ.2.83 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரை கிடைத்த உண்டியல் காணிக்கைகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் மொத்தமாக ரூ.2 கோடியே 83 லட்சத்து 17 ஆயிரத்து 242 வருமானம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் ரூ.2 கோடியே 70 லட்சத்து 22 ஆயிரத்து 242 நோட்டுகளாகவும், ரூ.12 லட்சத்து 95 ஆயிரம் நாணயங்களாகவும் இருந்தன.

தினசரி சராசரியாக ரூ.16.65 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும், பக்தர்கள் 329 கிராம் தங்கம் மற்றும் 3.8 கிலோ வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

அதோடு, 707 அமெரிக்க டாலர்கள், சவுதி ரியால்கள், ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களும் உண்டியலில் கிடைத்தன.

கோவில் வளாகத்தில் உள்ள மகா மண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்புடன் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.

கோடை விடுமுறையால் பக்தர்கள் வருகை அதிகரித்ததே வருமான உயர்வுக்கு காரணம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA