மத்திய பிரதேச படகு விபத்தில் பலியான தமிழர்களில் இருவர் உடல்கள் இன்று மீட்பு
போபால், 03 மே (ஹி.ச.) மத்திய பிரதேச மாநில ஜபல்பூர் மாவட்டத்தில் பர்கி அணையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய படகில் சுமார் 41 பேர் பயணித்ததாக அம்மாநில போலீஸார் தகவல
மத்திய பிரதேச படகு விபத்தில் பலியான தமிழர்கள் உடல்கள் இன்று மீட்பு


போபால், 03 மே (ஹி.ச.)

மத்திய பிரதேச மாநில ஜபல்பூர் மாவட்டத்தில் பர்கி அணையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய படகில் சுமார் 41 பேர் பயணித்ததாக அம்மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில் 28 பேர் மீட்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் இந்த தகவலை அளித்துள்ளனர்.

இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ், அவருடைய மனைவி கார்குழலி, மகன் தமிழ்வேந்தன், உறவினர்கள் மயூரன் மற்றும் சவுபாக்கியவதி ஆகிய ஐந்து பேர் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சூழலில் இன்று (மே 3) காலை தமிழகத்தை சேர்ந்த காமராஜ் (39), மயூரன் (5) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டது.

மேலும் இன்று (மே 3) படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவடைந்ததாக ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திரா சிங் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

மீட்புப் பணியில் அயராது உழைப்பை செலுத்திய பல்வேறு துறையினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

படகை இயக்கியவர்களின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியான வீடியோவில் படகுப் பயணங்களின்போது செய்ய வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விதிகளைக் கூட விபத்தில் சிக்கிய படகை இயக்கிய ஊழியர்கள் பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b