Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 மே (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி முடிவுற்றது. நாளை மே நான்காம் தேதி 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதற்காக தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.10% வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்திருந்தது.
இம்மாநிலத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவும் நிலையில் அரியணையை அடைய மும்முரம் காட்டி வருகிறது.
முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் ஆகியவர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏப்ரல் 29 மாலை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. இதில் பெரும்பான்மையாக திமுக ஆட்சியமைக்கும் என்றே கூறப்பட்டுள்ளன.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை, கொமதேக கட்சியின் வேட்பாளரும் அக்கட்சி பொதுச் செயலருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் நித்தியானந்தம் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்மையில் நேரில் சந்தித்தனர்.
மேலும், திமுக வேட்பாளர்களான அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சாக்கோட்டை அன்பழகன், ஜெயராமகிருஷ்ணன், டாக்டர் இந்திராணி, டாக்டர் ஆ.கா.தருண் உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்தனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று(மே 3) சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, அன்வர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு குறித்து அவர்களிடம் முதல்வர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b