Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 மே (ஹி.ச.)
சென்னை சர்வதேச விமான நிலையம் பகுதியில் இன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
சார்ஜாவில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர், டாக்ஸிவே வழியாக நிறுத்துமிடத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
அந்த நேரத்தில், விமானத்தில் இருந்த ஒருபயணி திடீரென அவசரகால வெளியேறும் கதவைத் திறந்து கீழே குதித்தார்.
இதனால் விமானத்தில் இருந்த பிற பயணிகள் மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, ஓடுபாதை பகுதியில் தப்பிச் செல்ல முயன்ற அந்த நபரை விரைந்து பிடித்தனர்.
கீழே குதித்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக BCAS மற்றும் விமான நிலைய அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார், பாதுகாப்பு விதிமுறைகள் எப்படி மீறப்பட்டன என்பதையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த எதிர்பாராத சம்பவம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Hindusthan Samachar / GOKILA arumugam