கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வு - 7,181 பேர் பங்கேற்பு
கோவை, 03 மே (ஹி.ச.) கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு 7,181 பேர் எழுதுகின்றனர். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026 - 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான
Neet Exam


கோவை, 03 மே (ஹி.ச.)

கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு 7,181 பேர் எழுதுகின்றனர்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026 - 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்காக ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் 16 மையங்களில் நீட் தேர்வை 7,181 பேர் எழுதுகிறார்கள். இதில் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் 298 பேர். அவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து உள்ளனர்.

சூலூர் பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி, அவிநாசி சாலை சி. ஜ.டி கல்லூரி, பீளமேடு பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளி, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி, சிவில் ஏரோ பி.எஸ்.ஜி கல்லூரி, சுங்கம் நிர்மலா கல்லூரி, ஜி.என் மில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, அசோகபுரம் அரசு மாதிரி பள்ளி, ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, பாரதி பார்க் அவிநாசிலிங்கம் கல்லூரி, பீளமேடு பி.எஸ்.ஜி கல்லூரி, சித்தாபுதூர் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி, புலியகுளம் பி.எம் ஸ்ரீ கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 16 மையங்கள் நீட் தேர்வு நடக்கிறது.

இந்த மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. எனவே கோவை மட்டுமின்றி சென்னையில் இருந்து வரும் தேர்வை கண்காணிக்கும் வகையில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தேர்வு மையம் 2 மணி தொடங்கி, மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN