சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகள் பரிசுகளை வழங்கிய வின்னர்ஸ் இந்தியா நிறுவனம்
கோவை, 03 மே (ஹி.ச.) கோவை எட்டிமடையில் உள்ள ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் நிர்வாக அலங்காவலரும், வின்னர்ஸ் இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனருமான C.K. கண்ணன் செய்தியாளர்களை
Winners India


கோவை, 03 மே (ஹி.ச.)

கோவை எட்டிமடையில் உள்ள ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் நிர்வாக அலங்காவலரும், வின்னர்ஸ் இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனருமான C.K. கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தந்தையின் நினைவு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கோவை மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு வீட்டுமனைகளை பரிசாக தந்துள்ளோம்.

இது தவிர சிறப்பாக செயல்படும் கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்த மாணவ-மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பெயரில் வீட்டு மனைகளை இலவசமாக கிரயம் செய்து தந்துள்ளோம் என்றார்.

மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் இலவச வீட்டுமனைகளை வழங்கி உள்ளோம் என்றும் இதுதவிர ரேக்ளா போட்டியில் முதலிடம் பெறும் வீரருக்கும் வீட்டுமனைகளை வழங்கி வருகிறோம் என்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட எங்கள் லே-அவுட்டுகளில் நாங்கள் இலவசமாக கொடுத்த வீட்டு மனைகளில் இன்று ஏராளமானோர் வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதுதவிர சின்னாம்பதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ஐந்து சென்ட் இடம் தானமாக கொடுத்து உள்ளோம்.

தற்போது அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN