ஒட்டன்சத்திரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து - 7-மாத பெண் குழந்தை உட்பட  இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் பலி
திண்டுக்கல், 03 மே (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவிலிருந்து பழனி கோவிலுக்கு சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழப்பு
பலி


திண்டுக்கல், 03 மே (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில்

ஆந்திராவிலிருந்து பழனி கோவிலுக்கு சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை

இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்

சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் இன்று

உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில்

ஆந்திரா மாநிலம் சித்தூர், நல கம்பளி வில்லேஜ் பகுதியில் இருந்து பழனி முருகன்

கோவிலுக்கு அண்ணாதுரை என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சத்திரப்பட்டி அருகே கார் சென்று

கொண்டிருந்தபோது ஓட்டுநர் கேமச்சந்திரன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக

கூறப்படுகிறது.

இதில் எதிர்பாராத விதமாக கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மஞ்சுளா(38)

மற்றும் அண்ணாதுரையின் 7-மாத பெண் குழந்தை அணியாஸ்ரீ ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காரில் வந்த ஏழு பேரில் பாஸ்கர் என்பவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தில்

7-மாத பெண் குழந்தை உட்பட மூன்று பேர் கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம்

சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam