அரசியல் கட்சிகள் உறவுகளை சீர்குலைக்கின்றன - இயக்குனர் தங்கர் பச்சன் கருத்து
சென்னை, 03 மே (ஹி.ச) அரசியல் கட்சிகளின் தாக்கம் சமூக உறவுகளில் பிளவை ஏற்படுத்தி வருவதாக இயக்குனர் தங்கர் பச்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தொடர்ந்து பத்து நாட்கள் பிறந்த ஊரில் இருந்தேன். இரண்டு பேர் கூ
Thangar


Hh


சென்னை, 03 மே (ஹி.ச)

அரசியல் கட்சிகளின் தாக்கம் சமூக உறவுகளில் பிளவை ஏற்படுத்தி வருவதாக இயக்குனர் தங்கர் பச்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

தொடர்ந்து பத்து நாட்கள் பிறந்த ஊரில் இருந்தேன். இரண்டு பேர் கூடினால்கூட முதலில் தேர்தல் அரசியல் பற்றிய பேச்சுகளே அதிகமாக உள்ளது.

மக்களின் வீட்டு சுவர்களில் கட்சிச் சின்னங்களும் விளம்பரங்களும் நிரம்பியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பணம் பரவியுள்ளது. பணம் பெற்றவர்கள் கூட, அதிகமாக பணம் கொடுத்தவரின் நிலை என்ன ஆகும் என்ற கவலையில்தான் இருக்கிறார்கள்.

யாருக்கு வாக்களித்தால் ஊருக்கும் நமக்கும் நன்மை கிடைக்கும் என்ற எண்ணமே இல்லை என விமர்சித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பிறகும் சுவர்களில் வரையப்பட்ட சின்னங்கள் அப்படியே இருக்கும் நிலையில், அதுபோலவே மக்களிடையே ஏற்பட்ட மனப்பிளவுகளும் நீடிக்கும் அபாயம் உள்ளதாகவும் தங்கர் பச்சன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ