தாம்பரம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சட்டவிரோத உணவகம்
சென்னை, 03 மே (ஹி.ச) செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தாம்பரம் அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்குள் முறையான சான்றிதழ்கள், அனுமதி எதுவுமின்றி உணவகம் ஒன்று செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மு
தாம்பரம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சட்டவிரோத உணவகம்


சென்னை, 03 மே (ஹி.ச)

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தாம்பரம் அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்குள் முறையான சான்றிதழ்கள், அனுமதி எதுவுமின்றி உணவகம் ஒன்று செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்ட இந்த மருத்துவமனை, திறக்கப்பட்ட நாள் முதலே செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

மருத்துவமனை நிர்வாகத்துடன் எந்தவித முறையான ஒப்பந்தமும் இல்லாமல், திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இந்த உணவகம் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த உணவகத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளரும், திமுக மாநில நிர்வாகியுமான கோல்ட் பிரகாஷ் என்பவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த உணவகத்தின் பின்புறம் மது பாட்டில்கள் சிதறிக் கிடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவமனை போன்ற பொது இடத்தில் இத்தகைய சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறுவது குறித்து உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b